தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கை காக்க என்கவுண்டர் சரியான முறை கிடையாது - அமைச்சர் மரிய வில்சன்

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கையெழுத்து பெறப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மரியா வில்சன் பதில் அளித்துள்ளார்.

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டத்திற்காக, மாதவரம் அடுத்த கொசப்பூரில் டிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் மரிய வில்சன்

அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டம் ஒழுங்கு பிரச்சினையைப் பொறுத்த வரையில், திமுகவும், அதிமுகவும் ஒரு நெகட்டிவ் செட்டிங் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்றால் உடனே என்கவுண்டர், மாவுக்கட்டு. அது சரியான முறை கிடையாது. நான் அதை ஊக்குவிக்க மாட்டேன். இதை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்த்துத் தீர்வு காண வேண்டும்.

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கையெழுத்து பெறப்பட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி

இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT