தமிழக செய்திகள்

தேனி திருக்காளத்தீஸ்வரர் கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு - ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. ஆய்வு

கோவில் கடைகளை முறைப்படி ஏலம் விட்டு வருவாயை பெருக்க வேண்டும் என ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பழமை வாய்ந்த திருக்காளத்தீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் கோவிலில் கம்பம் எம்.எல்.ஏ. ஜெகன்னாத் மிஷ்ரா ஆய்வு மேற்கொண்டார்.

உத்தமபாளையம் திருளத்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை ஒட்டியுள்ள நிலங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், பல ஆண்டுகளாக தெப்ப திருவிழா நடைபெறவில்லை என்று பக்தர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திருக்காளத்தீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். தெப்பக்குள ஆக்கிரமிப்புகள், சேதமடைந்த மைய மண்டபம் மற்றும் படிக்கட்டுகளை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவித்தார். கோவில் கடைகளை முறைப்படி ஏலம் விட்டு வருவாயை பெருக்க வேண்டும் என கூறிய அவர், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT