தமிழக செய்திகள்

தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2017-ல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களின் 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

1,058 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக எழுந்த புகாரில் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. 2021-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.