கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..பின்னணி என்ன?

லாட்டரி மார்ட்டின் தொடர்பான பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

கோவை :

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அமலாக்கத்துறை ஆய்வு

பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் நடைபெறும் இந்த சோதனைகள், மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய சில நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவருடன் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகளின் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சோதனை நடைபெறும் இடங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

லாட்டரி மார்ட்டின் தொடர்பான பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சோதனை முடிவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டசபையில் மார்ட்டின் தொடர்பாக விவாதம் நடைபெற்ற மறுநாளே, அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.