தமிழக செய்திகள்

என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

Engineer hangs himselfமார்த்தாண்டம் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவனத்தில் வேலை

மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் நெடுவிளையை சேர்ந்தவர் ஜெயா. இவருடைய மகன் ஜெயசூர்யா (வயது21). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டிலேயே இருந்தார்.

இந்த நிலையில் ஜெயசூர்யா கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் ஜன்னலை திறந்து உள்ளே பார்த்தனர்.

தூக்கில் பிணம்

அப்போது ஜெயசூர்யா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஜெய்சூர்யா தரைய சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்ததும், கையை அறுத்திருப்பதும் தரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு சய்து அவர் காதல் பிரச்சினையால் தற்கொலை செய்து காண்டாரா? என்ற காணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு