தமிழக செய்திகள்

இ.பி.எஸ். அரசியலில் இருந்து விலகி சித்திரகுப்தனாகவே மாறிவிட்டார்- வீரபாண்டியன்

இ.பி.எஸ்.சிடம் அரசியலை எதிர்பார்க்கிறோம், என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

வேலூர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வீரபாண்டியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இ.பி.எஸ் அரசியலிலிருந்து விலகி தற்போது சித்திரகுப்தனாக மாறியிருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சித் தலைவர் திமுக தலைமையில் உ:ள்ளவர்களை பார்த்து மேலே, கீழே போகனும், செத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பேசிவருகிறார். அவரிடம் கொள்கை இல்லை, அரசியல் இல்லை, அது அவருடைய வறட்சியை காட்டுகிறது.

இ.பி.எஸ்-சிடம் அரசியலை எதிர்பார்க்கிறோம். இந்த அரசின்செயல் திட்டங்களில் ஏதும் பிழை, குறை இருந்தால் அதை சுட்டிக்காட்டட்டும். அதற்கு முழு உரிமை இருக்கிறது, ஆனால் இன்றைக்கு எதிர்கட்சித்தலைவர் பேசிவருவது எல்லாம் ஒரு பேச்சா? இது மட்டுமல்லாமல் கொரோனாவில் முதல்-அமைச்சர் போயிருப்பார் என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு மு.வீரபாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.