நாகர்கோவில்,
தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
திருவனந்தபுரம் சென்ட்ரல் - கன்னியாகுமரி வழித்தடத்தில் இரணியல் - நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையில் புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை பாதையை செயல்படுத்துவதற்கான பணிகளின் காரணமாக, ரெயில் சேவைகளில் கீழ்க்காணும் வகையில் மாற்றங்கள்; அமலில் இருக்கும்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்
28 மார்ச் 2026 (ஒரு நாள் மட்டும்)
1) ரெயில் எண் 16729 மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.
29, 30 மார்ச் 2026 (இரண்டு நாட்கள்)
பின்வரும் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன:
1. 56305 நாகர்கோவில் – திருவனந்தபுரம் மேற்கு பயணிகள் ரெயில்
2. 56310 திருவனந்தபுரம் மேற்கு – நாகர்கோவில் பயணிகள் ரெயில்
3. 56306 திருவனந்தபுரம் மேற்கு – நாகர்கோவில் பயணிகள் ரெயில்
4. 56309 நாகர்கோவில் – திருவனந்தபுரம் மேற்கு பயணிகள் ரெயில்
5. 56705 புனலூர் – கன்னியாகுமரி பயணிகள் ரெயில்
6. 56706 கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரெயில்
7. 66306 கொல்லம் – கன்னியாகுமரி மெமு ரெயில்
8. 66305 கன்னியாகுமரி – கொல்லம் மெமு ரெயில்
9. 16730 புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ்
10. 56101 நாகர்கோவில் – கொல்லம் பயணிகள் ரெயில்
11. 56102 கொல்லம் – நாகர்கோவில் பயணிகள் ரெயில்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.