தமிழக செய்திகள்

ஈரோடு: பராமரிப்பு பணி காரணமாக 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்திவைப்பு

மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு வழியாக இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளம் டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் (18190) நாளை (திங்கட்கிழமை), வருகிற 17, 20, 22, 24, 27-ந்தேதிகளில் வழியில் ஏதேனும் ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரெயில்கள் நிறுத்தம்

மேலும் ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) நாளை (திங்கட்கிழமை), 17, 20, 22, 24, 27-ந்தேதிகளில் ஏதேனும் ஒரு ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்படுகிறது.இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.