தமிழக செய்திகள்

ஈரோடு: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

தாளவாடி மலை பகுதியில் உள்ள நீரோடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாளவாடி மலை பகுதியில் உள்ள நீரோடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், காட்டாற்று வெள்ளத்தை வேடிக்கை பார்க்க மலைப்பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் நீரோடை பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது, சிறுவன் நீரோடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.