ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 49). மெக் கானிக். இவர் தனது உறவினரின் மனைவியான 26 வயது இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை கணவரிடம் சொல்லக்கூடாது என இளம்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.
இந்தநிலையில் இளம்பெண்ணின் கணவர், மோகன்குமாருடன் சேர்ந்து தொழில் செய்ய இருப்பதாக இளம்பெண்ணிடம் கூறி உள்ளார். இதனால் இளம்பெண் நடந்த விஷயத்தை கணவரி டம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர். தனது மனைவியுடன் சென்று கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்தனர்.