தமிழக செய்திகள்

ஈரோடு: வாகன ஓட்டிகளை காட்டு யானைகள் துரத்தியதால் பரபரப்பு

ஆசனூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை காட்டு யானை வெளியேறியது. பின்னர் அந்த காட்டு யானை ஆசனூர்-திம்பம் சாலைக்கு வந்தது. அதன்பின்னர் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரை பார்த்ததும் அதை யானை துரத்த தொடங்கியது. இதனால் டிரைவர் அச்சமடைந்து காரை பின்னோக்கி இயக்கி தப்பித்தார்.

இதேபோல் தாளவாடி-தலமலை சாலையில் உள்ள சிக்கள்ளி அருகே நேற்று மாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை துரத்தியது. இதனால் அவர் வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கி யானையிடம் இருந்து உயிர் தப்பினார். சாலையில் செல்லும் வாகனங்களை காட்டு யானை துரத்தியதால், அவ்வழியாக செல்வோர் அச்சமடைந்தனர்.