ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் தாமரைக்கரையை அடுத்த ஒன்னகரையைச் சேர்ந்த பொம்மையன் (வயது 60), தொழிலாளி. தட்டக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட குட்டையூர் அருகே மிட்டார வனப்பகுதியில் பொம்மையன், ஒன்னகரையைச் சேர்ந்த அழகேசன், தம்முரெட்டியைச் சேர்ந்த சித்தன் ஆகியோர் நேற்று முன்தினம் மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டெருமை, பொம்மையனை முட்டி தள்ளிவிட்டு ஓடியது. இதில் படுகாயம் அடைந்த பொம்மையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.