நெல்லை,
தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் (இ.எஸ்.ஐ.) நெல்லை துணை மண்டலம் சார்பில், இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதேனும் குறை இருந்தால், அதனை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்துக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 10-ந் தேதி மாலை 4 மணிக்கு இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
முகாமில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், துணை மண்டல அலுவலக குறைதீர்க்கும் அதிகாரி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் மற்றும் இ.எஸ்.ஐ. திட்ட மருந்தக மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
பயனாளிகள் குறைகள் ஏதேனும் இருந்தால் இந்த முகாமில் கலந்துகொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை இ.எஸ்.ஐ. நெல்லை துணை மண்டல அலுவலக பொறுப்பு அதிகாரியும், துணை இயக்குனருமான பாஸ்கர் தெரிவித்துள்ளார்.