தமிழக செய்திகள்

சுயஉதவி குழுக்களுக்கு கட்டுரை போட்டி

சிவகிரியில் சுயஉதவி குழுக்களுக்கு கட்டுரை போட்டி நடந்தது.

சிவகிரி:

தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிகளுக்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி சிவகிரியில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் சாந்தி, சமுதாய அமைப்பாளர் செல்வகுமார், சமுதாய ஒருங்கிணைப்பாளர் காளி ஆகியோர் வரவேற்று பேசினர்.

இதில் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 122 குழுவிற்கான கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் தலா 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தென்காசி மகளிர் திட்டம் இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி தலைமை எழுத்தர் தங்கராஜ், அனைத்து கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT