தமிழக செய்திகள்

அதிமுகவின் ஏன் இந்த நிலைக்கு வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் - அமைச்சர் அருண்ராஜ்

அதிமுக எந்த நிலைமையில் இருக்கும் என்பதை, கூடிய விரைவில் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது:-

108 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது

அதிமுகவிலிருந்து ஏன் தவெகவிற்கு வருகிறார்கள் என்று தெரியும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக 108 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாக போனதால் தான், அந்த கட்சியின் நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள்.

சிறந்த முடிவு

2024இல் பாஜக வேண்டாம் என்று சொன்னவர், மீண்டும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். இதில் முக்கியமானது, இந்த தேர்தல் முடிவை மதிக்காமல் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து, முதல்-அமைச்சராக நினைத்து எடுத்தது தான் ஒரு சிறந்த முடிவு.

மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்

அந்த முடிவின் காரணமாகத்தான் அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். அதிமுக எந்த நிலைமையில் இருக்கும் என்பதை, கூடிய விரைவில் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

ஜனநாயக உரிமை

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை. ஆனால் மக்களால் ஏற்க வேண்டும் என்பதே முக்கியம். தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்துள்ளது. தற்போது புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மக்கள் தான் தீர்மானிப்பார்கள்

ஏற்கனவே பலமுறை தோல்வியடைந்த கட்ட்சியை மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அண்ணாமலையின் வெற்றி குறித்து மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறினார்.