சென்னை,
நாங்கள் யாருக்காகவும் பயப்பட போவதில்லை. யாருக்காகவும் சைலண்டாக இருக்க போவதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தமிழ்நாடு அரசியலில், மோடிக்கு எதிராக அனைவரும் திடீரென சைலண்டாக இருக்கிறார்கள். துணை மாப்பிள்ளையான எதிர்கட்சி தலைவர் அமைதியாக இருக்கிறார். மத்திய அரசு செய்யும் அநியாயங்களை சொல்லவேண்டியது காங்கிரசின் கடமை. நாங்கள் யாருக்காகவும் பயப்படவில்லை, சைலண்டாகவும் இல்லை. முதலில் பேசிக் கொண்டிருந்தவர்களே பேசவில்லை. ஆளும் த.வெ.க. கட்சியும் இது குறித்து பேச வேண்டும்.
நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசுவது தான் மதவாதம். வன்மமாய் பார்க்கிற பார்வை நயினார் நாகேந்திரனுக்கு இருக்கிறது. இந்த வன்மம் தான் தமிழ்நாட்டில் அவரை மதவாதியாக காட்டுகிறது. கடவுளை நம்புவது எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது, ஆனால் இன்னொருவர் நம்பிக்கையை, மதத்தை குறித்து பிரச்சினை செய்யக்கூடாது.
ஒவ்வொரு MLA, MPக்கும் ராஜினாமா செய்ய உரிமை இருக்கிறது, எல்லா ராஜினாமாவும் குதிரை பேரமல்ல. திமுகவுக்கு இடைத்தேர்தல் சவாலாக இருக்கும் என்பதால், அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும்
இவ்வாறு அவர் கூறினார்.