சென்னை,
அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு. இந்த திட்டம் முதற்கட்டமாக மனிதவள மேலாண்மை துறையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக மனித வளத்துறை சார்பில் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் மற்றும் பேஸ் ஐடி மூலம் வருகை பதிவேட்டு முறை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் கண்டிப்பாக நடைப்பிடிக்க வேண்டும். காலை 10 மணிக்கு முன்னர் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அவர்கள் வருகையை பயோ மெட்ரிக்கில் பேஸ் ஐடி மூலமும், பதிவேடு மூலமும் கணக்கிட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் வருகையை துல்லியமாக கண்காணிக்கவும், பணி நேரத்தை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறையில் மட்டுமே இது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, தலைமை செயலகத்தின் பிற துறைகளுக்கும், பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தகவல் தெரிகிறது.