சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற ஜூன் 3,4,5,6,9,10,11,21,26 மற்றும் ஜூலை 2, 5, 6 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் அசோகபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16021) ரத்து செய்யப்படுகிறது. அதே போல, அசோகபுரத்தில் இருந்து வருகிற ஜூன் 4,5,6,7,10,11,12,22,27 மற்றும் ஜூலை 3, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022) ரத்து செய்யப்ப டுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து வருகிற ஜூன் 5,6,7,8,11,12,13, 23, 28 மற் றும் ஜூலை 4, 7, 8 ஆகிய தேதிகளில் கே.எஸ்.ஆர். பெங்களூருவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12657) ரத்து செய்யப்படுகிறது. அதே போல, பெங்களூருவில் இருந்து வருகிற ஜூன் 4,5,6,7,10,11,12,22,27 மற்றும் ஜூலை 3, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12658) ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.