கரூர்,
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் அதிர்ஷ்டானத்தில் ஆராதனை வழிபாடுகள் மற்றும் விழாக்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக ஈரோடு-கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊஞ்சலூர் ரெயில் நிலையத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை ஏற்கனவே 6 ரெயில்கள் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது கூடுதலாக கரூர் வழியாக செல்லும் 2 ரெயில்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி மற்றும் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஊஞ்சலூர் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்:- 16235) அடுத்த மாதம் (டிசம்பர் 31-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 1-ந் தேதி இரவு 11.13 மணிக்கு ஊஞ்சலூர் ரெயில் நிலையம் வந்து ஒரு நிமிடம் நின்று பின்னர் இரவு 11.14 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல் மறுமார்க்கமாக மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்:- 16236) அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 1-ந் தேதி காலை 4.09 மணிக்கு ஊஞ்சலூர் ரெயில் நிலையம் வந்து ஒரு நிமிடம் நின்று பின்னர் காலை 4.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.