தமிழக செய்திகள்

பெங்களூரு-ஆந்திரா இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.

சனிக்கிழமை மட்டும்

அதன்படி, பெங்களூருவில் இருந்து வருகிற 13-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை (சனிக்கிழமை மட்டும்) ஆந்திர மாநிலம் நரசாபூருக்கு சிறப்பு ரெயில் (07154) இயக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மட்டும்

மேலும் இந்த ரெயில் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும். இதே போல, நரசாபூரில் இருந்து வருகிற 12-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) பெங்களூருவிற்கு சிறப்பு ரெயில் (07153) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.