சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.06070), வருகிற மே 5-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரையிலும்(வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, சென்னை எழும்பூாில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில்(06069) மே 8-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரையிலும்(வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* நெல்லையில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில்(06166), மே 3-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரையிலும்(ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில்(06165), மே 4-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரையிலும்(திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* மங்களூரு சென்டிரலில் இருந்து மே 4-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரையில்(திங்கட்கிழமை மட்டும்) மாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில்(06126), மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரையில்(செவ்வாய்கிழமை மட்டும்) மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில்(06125), மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்டிரல் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.