தமிழக செய்திகள்

ராமேசுவரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் நீட்டிப்பு

ராமேசுவரம்-ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்.07355), வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகள் வரையும், மறு மார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து ஹூப்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07356), வருகிற 6,13,20,27 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.