தமிழக செய்திகள்

எழும்பூர்-கன்னியாகுமரி இடையிலான சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06046) இயக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06045) இயக்கப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06046) இயக்கப்படுகிறது.

நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) மற்றும் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் (06166, 06070) இயக்கப்படுகின்றன. அதேபோல, தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் 7-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் (06165, 06069) இயக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.