சென்னை,
தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06059) வரும் 20, 27 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் வகையில் 2 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06060) வரும் 21 மற்றும் 28-ந் தேிகளில் இயக்கப்படும் வகையில் 2 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.