சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
* நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06166), வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும், மறுமார்க்க மாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* நெல்லையில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06070), இன்று (3-ந்தேதி) முதல் அக்டோபர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06069), நாளை (4-ந்தேதி) முதல் அக்டோபர் 30-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.