சேலம்,
ஐதராபாத்- மங்களூரு சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (07097) நாளை முதல் நவம்பர் 25-ந் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப் படும். ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சேலம் வந்து, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு காசர்கோடு வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்டிரலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மங்களூரு சென்ட்ரல்- ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (07098)10-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும். மங்களூரு சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், காசர்கோடு, பாலக்காடு, ஈரோடு, சேலம் வழியாக சென்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஐதராபாத்தை சென்றடையும். இந்த ரெயில் சேவை நீட்டிப்பு மூலம் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் ஐதராபாத், கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு பயணம் செய்ய கூடுதல் ரெயில் வசதி கிடைத்துள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.