ஈரோடு,
அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தலா ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டி தற்காலிகமாக கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. அதன் படி கோவை சந்திப்பில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22668) இன்று (செவ் வாய்க்கிழமை) முதல் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதம் 4-ந்தேதி வரையும், நாகர்கோவில் சந்திப்பில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -கேவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22667) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி வரையும் ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
இதேபோல் காரைக்காலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16187) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி மாதம் 5-ந்தேதி வரையும், எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் -காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16188) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி வரையும் ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டி இணைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமைகளில் கோவை சந்திப்பில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் கோவை -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16618) வரு கிற 6-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 29-ந்தேதி வரையும், புதன்கிழமை களில் இரவு 8.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் -கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16617), வருகிற 7-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 30-ந்தேதி வரை ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.