தமிழக செய்திகள்

உடன்குடியில் கோஷ்டி மோதல் யூடியூபர் ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது வழக்கு

போலீசார் இருதரப்பையும் சேர்ந்த ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம்,

உடன்குடி பஸ்நிலையம் ரோடு பரதர் தெருவைச்சேர்ந்த சுடலையாண்டி(வயது44). நகைத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மகளையும், அண்ணன் சுந்தரவேல் மகளையும் டியூசன் சென்டருக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்துச்சென்றார். அப்போது பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து வீட்டு முன்பு வளர்க்கப்படும் முள்செடி சுடலையாண்டி மகளின் இடது கண்பகுதியில் குத்திக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த முள்செடிகளை அகற்றியுள்ளார். மறுநாள் சுடலையாண்டி அந்தப்பகுதிக்கு சென்றபோது, ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, சகோதரர் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகியோர் இதுபற்றி கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சுடலையாண்டிக்கு ஆதரவாக அந்தப்பகுதியைச் சேர்ந்த சுந்தர வேல், உறவினர் சரஸ்வதி ஆகியோர் வந்தபோது இருதரப்புக்கும் கைலப்பானது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.இதுகுறித்து போலீசார் இருதரப்பையும் சேர்ந்த ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.