தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க, முதல் அமைச்சர் விஜய் இன்று அனைத்துக்கட்சி எம்பிக்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார். இதில் திமுக பங்கேற்கவில்லை. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள திமுக எம்பி கனிமொழி நியாயமான தொகுதி மறுவரையறை நடத்த வேண்டும் என திமுக கோரியது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்து கூட்டம் நடத்தியதற்கான காரணம் தெளிவாக இல்லை தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதே திமுகவின் எண்ணம்.
பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு, நியாயமான தொகுதி மறுவரையறையை கொண்டுவர வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு எட்டப்பர்கள் யார் என்பது தெரிந்தது” என்றார்.