தமிழக செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை

சுஜாதா தனது கணவரை செல்போனில் அழைத்து அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48). இவர் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுஜாதா(40) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது நண்பரான காம்பாய்கடை பகுதியை சேர்ந்த அச்சு (எ) அச்சுதானந்தன் என்பவருக்கும் சுஜாதாவிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் அச்சுவின் மனைவி பரிமளா, சிவகுமாரை அழைத்து அவரது மனைவியை கண்டிக்குமாறும், தானும் தனது கணவரை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜாதா தனது கணவரை செல்போனில் அழைத்து அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

உடனே கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சிவகுமார் கதவைத் தட்டியும் திறக்காததால் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சுஜாதா இறந்ததால் மனவேதனை அடைந்த அச்சுவும் விஷம் குடித்துள்ளார். அவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.