தமிழக செய்திகள்

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.13 வீழ்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.13 வீழ்ச்சி அடைந்தது.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.13 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக வீழ்ச்சி அடைந்து உள்ளது.

முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.95 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT