தமிழக செய்திகள்

மதுபோதையால் குடும்ப தகராறு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஏரல் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர், மது அருந்திவிட்டு வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மதுபோதையால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மூட்டை தூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூட்டை தூக்கும் தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சிவன் கோவில் தெரு, பரமசிவன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் மகேஸ்வரன் (வயது 42), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் அவரது மனைவி கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டிற்குள் கதவைப் பூட்டிக்கொண்ட மகேஸ்வரன், மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT