பேட்டரி பேருந்து 
தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு பேட்டரி பேருந்து வழங்கிய பிரபல நிறுவனம்

பழனி மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற பாத விநாயகர் கோவில் முன்பாக, இன்று காலையில் இந்த புதிய பேட்டரி பேருந்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பேட்டரி பேருந்து ஒன்றை பிரபல நிறுவனமான சுப்ரீம் மொபைல்ஸ் வழங்கியுள்ளது.

பேட்டரி பேருந்து

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி பேருந்து ஒன்று இன்று (திங்கட்கிழமை) காலையில் நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் பொது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிவலப் பாதையை எளிதாகக் கடக்க ஏதுவாக இந்த வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜை - தொடக்கம்

பழனி மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற பாத விநாயகர் கோவில் முன்பாக, இன்று காலையில் இந்த புதிய பேட்டரி பேருந்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பக்தர்களின் பயன்பாட்டிற்காக இந்த வாகனம் முறைப்படி இயக்கி வைக்கப்பட்டது. இந்த பேருந்து மூலம் பக்தர்கள் விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையம் மற்றும் படிப்பாதை ஆகிய இடங்களுக்கு எளிதாகச் சென்று வர முடியும்.

முற்றிலும் இலவச சேவை

பழனி கோவில் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே பல்வேறு தரப்பினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 45-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் கிரிவலப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக இந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக இயக்கப்பட்டு வரும் நிலையில், சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள இந்த புதிய பேட்டரி பேருந்தும் இந்த இலவச சேவையில் இணைந்துள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT