தமிழக செய்திகள்

மாநகர பஸ்களில் மாதாந்திர பாஸ் எடுக்க கட்டண சலுகை: சென்னை பயணிகளுக்கு குட்நியூஸ்

சென்னை ஒன் செயலியில் பாஸ் எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 கேஷ் பேக் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்​னை​யில் போக்​கு​வரத்து சேவை​களை ஒருங்​கிணைப்​ப​தற்​காக, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம் (கும்​டா) ஏற்​படுத்​தப்​பட்​டது. இந்த குழு​மம் வாயி​லாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த ஆண்டு செப்​.22-ம் தேதி தொடங்கி வைக்​கப்​பட்ட இந்த செயலி மூல​மாக மெட்ரோ ரெயில், மாநகர பேருந்​துகளில் பயணிப்​ப​தற்​கான டிக்​கெட்​டு​களை கியூஆர் குறி​யீடு வழி​யாக பெறலாம். இந்த 3 சேவை​களுக்​கும் சேர்த்து அல்​லது தனித் தனி​யாக​வும் மக்​கள் இந்த செயலியில் டிக்​கெட் பெற முடி​யும். அறி​முகம் செய்​யப்​பட்​டது முதல் பொது​மக்​கள் இடையே இந்த செயலி மிகுந்த வரவேற்பை பெற்று வரு​கிறது. தொடந்து இந்த செயலியில் பல்​வேறு வசதி​கள் கொண்டு வரப்​பட்​டன.

மாநகர பேருந்​துகளுக்​கான மாதாந்​திர பாஸ் பெறும் வசதி, ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி, மெட்​ரோ, மாநகர பஸ், ரெயி​லில் ஒரு முறை சலுகை பயணம் ஆகியவை கொண்டு வரப்​பட்​டன. இந்த நிலையில் மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ்களை சென்னை ஒன் செயலியில் எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 50 ரூபாய் கேஷ் பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகையைப் பெறுவது எப்படி?

* Chennai One App-ல் “Pass” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* உங்கள் தேவைக்கேற்ப Gold அல்லது Diamond பாஸைத் தேர்ந்தெடுக்கவும்.

* பணத்தை BHIM App மூலம் செலுத்தவும்.

* ₹50 உடனடி கேஷ்பேக் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்!

முக்கிய குறிப்பு:

இந்தச் சலுகை முதல் முறை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.