தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

கபிஸ்தலம் அருகே உள்ள பூஞ்சோலை திடல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது70). விவசாயி. சம்பவத்தன்று சுவாமிநாதன் கும்பகோணம்- திருவையாறு மெயின் ரோட்டில் பூஞ்சோலை திடல் என்ற பகுதியில் நடந்து சென்றார். அப்போது கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் சுவாமிநாதன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தா. இது குறித்து அவருடைய மனைவி கல்யாணி அளித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.