தமிழக செய்திகள்

உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டம் மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்களை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

உழவன் செயலியை ஆண்ட்ராய்டு செல்போனில் 'ப்ளே ஸ்டோர்' வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் விவசாயிகள் தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து கொண்டு உழவன் செயலியை பயன்படுத்தலாம்.

உழவன் செயலியில் 22 வகை பயன்பாடுகளை விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த உழவன் செயலி மூலம் வேளாண் தொடர்பான விவரங்களை விவசாயிகள் வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த தகவல்களுக்கு Youtube-https://www.youtube.com/agridepttn, Facebook-https://www.facebook.com/tnafwd மற்றும் Twitter- https://twitter.com/agridept-tn ஆகிய சமூக ஊடகங்களுடன் இணைந்து வேளாண் தொடர்பான மானிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை அறிந்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு