தமிழக செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; 27-ந் தேதி நடக்கிறது

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெறுகிறார். எனவே இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT