தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடியில் நாளை நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்' நாளை (18.12.2025, வியாழன்கிழமை) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முத்து அரங்கத்தில்' வைத்து நடைபெற உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.