கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

13 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது

சிறுமியின் தந்தையை போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

வேலூர்,

வேலூர் தாலுகாவை சேர்ந்த 8-ம்வகுப்பு முடித்துள்ள 13 வயது சிறுமிக்கு, கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் அனைத்து மகளிர் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது காட்பாடியை சேர்ந்த வாலிபரை காதலித்து வருவதாகவும், ஆசைவார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறிய மாணவி, வாலிபர் பற்றி முரண்பாடான தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த சில மாதங்களாக பெயிண்டரான மாணவியின் தந்தையே இரவு நேரத்தில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் கர்ப்பமானதும், தந்தையால் கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று பொய்யான தகவல்களை கூறியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்தனர்.