தாம்பரம்,
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). இவரது மகன் மணிகண்டன். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு மணிகண்டன் உடல் நலக்குறைவால் இறந்து போனார். இதையடுத்து மீனா தனது 2 குழந்தை களுடன் மாமனார் மற்றும் மாமியாருடன் தங்கி வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாளின் மனைவி காஞ்சீபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் பெருமாள், அவரது மருமகள் மீனா மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு மீனா வழக்கம் போல் தனது குழந்தையுடன் தனியாக தூங்கினார். அப்போது மாமனார் பெருமாள் திடீரென மருமகள் மீனாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றார். அவரை மீனா கண்டித்து கெஞ்சினார். ஆனாலும் பெருமாள் தொடர்ந்து அத்து மீறியதாக கூறப்படு கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா வீட்டில் இருந்த கத்தியால் மாமனார் பெருமாளின் கழுத்தில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது பெருமாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு ப்பதிவு செய்து மீனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். பாலியல் ரீதியாக அத்துமீறிய மாமனாரை மருமகள் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.