தமிழக செய்திகள்

தனக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை கேட்ட தந்தை... ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்

மனைவிக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறந்ததல்ல என கூறி டி.என்.ஏ பரிசோதனை செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

திருவண்ணாமலை,

தனக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை கேட்ட தந்தைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் நீதிமன்றம் விதித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனது மனைவிக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறந்ததல்ல என கூறி டி.என்.ஏ பரிசோதனை செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு சமீம் அகமது நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த மனுவானது 10 ஆண்டுகளுக்கு பிறகு பிறப்பித்துள்ளது. மேலும், டி.என்.ஏ பரிசோதனை செய்வது குழந்தையின் தனியுரிமை, கன்னியம் மற்றும் அடையாளம் தொடர்பான உரிமைகளை பாதிக்கக்கூடும். மேலும், கணவன் - மனைவி இடையே பிரச்சினையின் போது குழந்தையை ஒரு கருவியாக பயன்படுத்த கூடாது என்று தெரிவித்த அவர் மனுதாரரான தந்தைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை முடித்து வைத்தார்.

SCROLL FOR NEXT