தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதாக அச்சம் - சி.சி.டி.வி.யில் பதிவான உருவத்தால் பரபரப்பு

நள்ளிரவில் வீட்டின் வாசல் பகுதியில் சிறுத்தை போன்ற விலங்கு உலா வரும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் பு.மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டம் அருகே வசிக்கும் விவசாயி எழில் ராஜா என்பவரது வீட்டில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் இரவு நேரத்தில் பதிவான காட்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் மர்ம விலங்கு ஒன்று அந்த பகுதியில் நடமாடுவது சி.சி.டி.வி. கேரமாவில் பதிவாகியுள்ளது. அந்த விலங்கு அங்குள்ள கோழிக்கூண்டை மோப்பம் பிடித்தபடி சுற்றித் திரிந்துள்ளது. இந்நிலையில், வந்தது காட்டுப்பூனையா? அல்லது சிறுத்தையா? என்பது உறுதியாக தெரியாத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, விலங்கை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.