தமிழக செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

முன்னதாக யூடியூப் சேனல் நடத்தி சமூக மற்றும் அரசியல் கருத்துகளை பெலிக்ஸ் ஜெரால்டு வீடியோவாக வெளியிட்டு வந்தார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் பெலிக்ஸ் ஜெரால்டு. இவர் தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து அரசு அறிவித்துள்ளது. மேலும் மூன்று ஆண்டுகள் அவர் இந்த பதவியை வகிப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மூத்த பத்திரிகையாளரான பெலிக்ஸ் ஜெரால்டு, அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு, யூடியூப் சேனல் நடத்தி சமூக மற்றும் அரசியல் கருத்துகளை வீடியோவாக வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT