திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பெண் தூய்மை பணியாளர் கையில் துடைப்பத்துடன் சிகிச்சை அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அரசு மருத்துவமனையானது பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றிய பெண் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
கையில் துடைப்பத்துடன் மருத்துவமனையை சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த பெண் பணியாளர், நோயாளிக்கு கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்ட சிரிஞ்சை சரி செய்வது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. நோயாளிக்கு உதவியாக இருந்த அவரது உறவினரே இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கையில் துைடப்பத்துடன் சுத்தம் செய்து வந்த தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்துள்ள நிலையில் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் தொற்று பரவல் அதிகரித்து நோயாளி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமை டாக்ட ருக்கு தெரியாமல் இது எப்படி நடந்தது என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.