தமிழக செய்திகள்

திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்பு சேலையில் தீப்பிடித்து பெண் பக்தர் படுகாயம்

திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 55) என்பவர் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். முன்னதாக அவர் கோவில் ராஜகோபுரம் முன்பு தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.

வழக்கமாக கிரிவலம் செல்ல தொடங்கும் பக்தர்கள் ராஜகோபு ரம் எதிரில் உள்ள தேரடி வீதியில் பதினாறு கால் மண்டபத்தின் எதிரில் கற்பூரம் ஏற்றிவிட்டு வழிபட்ட பின்னரே கிரிவலத்தை தொடங்குவார்கள். இந்த நிலையில் ஜெயலட்சுமி தேரடி வீதி யில் நின்று ராஜகோபுரத்தை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் கற்பூரம் தீப்பற்றி எரிந்தது.

இதைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச் சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.