விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நாரேரிக் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(வயது 29), வி சாயி. இவர், தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவ தற்காக ரெட்டனையில் உள்ள இளமின் பொறியாளர் அலுவ லகத்தை அணுகினார்.
அப்போது அங்கு பணியில் இருந்த முகையூர் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்த மின் வணிக ஆய்வாளர் ரேகா(40), ஹரிகிருஷ்ணனிடம் புதிய இணைப்பு கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கூறிய தாக தெரிகிறது.
இதுபற்றி ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் விழுப்பு ரம் லஞ்ச ஒழிப்பு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டு களை கொடுத்து, மின் வணிக ஆய்வாளர் ரேகாவிடம் கொடுக்குமாறு அவரிடம் அறிவுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து நேற்று மதியம் மின் அலுவலகத்துக்கு சென்று. ரேகாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.