தேனி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி 139 சவரன் நகைகள் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பெண் ஊழியரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே தும்மக்குண்டுவைச் சேர்ந்தவர் முருகன்(எ) துரைமுருகன் (வயது 38). இவர் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். இவர் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 139 சவரன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக உரிமையாளர் முருகன்(எ) துரைமுருகன், அவருடைய தந்தை முருகேசன், கடை ஊழியரான ஸ்ரீமதி(26) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஸ்ரீமதியை நேற்று கைது செய்தனர்.