தமிழக செய்திகள்

வயிற்று வலியால் பெண் என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை

வயிற்று வலியால் பெண் என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் வெங்கமேடு கொங்குநகர் அண்ணா சாலையைச் சேர்ந்தவர் ஜினோலினி(வயது 24). என்ஜினீயரான இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதை தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜினோலினி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜினோலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்