தமிழக செய்திகள்

முசிறி அருகே பெண் மாயம்

முசிறி அருகே பெண் மாயமானார்

முசிறி, செப்.10-

முசிறியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (54). இவரது மகள் மஞ்சுளா (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்து இருந்த அவர், மீண்டும் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.முசிறி