தமிழக செய்திகள்

நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பு; பெண் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்

சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர்,

நகை திருட்டு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 50). பூ வியாபாரி. இவர் கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது ஒரு பெண் சங்கரலிங்கம் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துச்செல்வது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சங்கரலிங்கம் வீட்டின் அருகே வசிப்பவர் பாக்கியலட்சுமி (40). இவர் சங்கரலிங்கத்துக்கு சகோதரி உறவு முறை ஆவார். இவர் ராஜபாளையம் வடக்கு போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கும், இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தோம். இதுகு றித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம்.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவு தம் கோயல், ஏட்டு பாக்கியலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். திருட்டு சம்பவத்தில் பாக்கியலட்சுமிக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இருந்ததால் விசாரணைக்கு ஏதுவாக அவர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். தீவிர விசாரணைக்கு பிறகு தான் முழுவிவரம் தெரியவரும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

SCROLL FOR NEXT